Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
2026-இல் ஆஸ்திரேலியக் கடவுச்சீட்டின் உலகத் தரவரிசை என்ன?
16/07/2026 Duração: 03min2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அனைத்து விடயங்களின் மதிபீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
சிறுவர்களை மொழி மற்றும் கலாச்சாரத்தோடு இணைக்கும் இலகு வழி
16/07/2026 Duração: 13minபண்டைய கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மொழிகளை நவீன வாழ்க்கையுடன் இணைக்கின்ற வகையில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், புதிர்கள், கல்வி புகட்டும் கருவிகள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களை The Heritage Supply Co என்ற நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தை நிறுவி, இயக்கி வரும் லக்ஷ்மி எஸ். நிர்மலானந்தா அவர்களுடன் ் குலசேகரம் சஞ்சயன் 2022ஆம் ஆண்டு நடத்திய உரையாடலின் மறு ஒலிபரப்பு.
-
Car Insuranceல் மறைந்திருக்கும் தந்திரங்கள்
16/07/2026 Duração: 12minCar Insurance என்றால் என்ன? Car Insuranceல் உள்ள வகைகள் என்ன? விபத்துகளில் ஈடுபட்ட கார்களின் ஓட்டுனர்கள் தங்களின் Insurance நிறுவனத்திற்கு தெரிவிக்க சேகரிக்க வேண்டிய விடயங்கள் என்ன? இது போன்று Car Insurance குறித்த பல கேள்விகளுக்கு விரிவாக பதிலளிக்கிறார் சிட்னியை சேர்ந்த வழக்கறிஞர் விஜி வீராசாமி அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.
-
Work From Home என்பது ஊழியரின் உரிமையா? நிறுவனம் ‘No’ சொல்ல முடியுமா?
16/07/2026 Duração: 09minஆஸ்திரேலியாவில் COVID பெருந்தொற்றுக்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை செய்வது பல ஆஸ்திரேலியர்களின் வேலை வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறியுள்ளது. பலர் Work From Home முறையை விரும்புகின்றனர். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்துகின்றன. இந்த பின்னணியில் வீட்டிலிருந்து வேலை செய்வது ஒரு ஊழியரின் சட்டப்பூர்வ உரிமையா? ஒரு Work From Home கோரிக்கையை நிறுவனம் எந்த காரணங்களின் அடிப்படையில் மறுக்க முடியும்? அண்மைய Fair Work Commission தீர்ப்புகள் என்ன சொல்கின்றன? செய்தியின் பின்னணி நிகழ்ச்சி வழி விளக்குகிறார் றைசெல்.Since the COVID pandemic, working from home has become a regular part of working life for many Australians. Many employees prefer the flexibility of working from home. However, an increasing number of employers are now requiring their staff to return to the office. Against this backdrop, is working from home a legal right for employees in Australia? On what grounds can an employer refuse a work-from-home request? And what do recent Fair Work Commission decisions
-
சிட்னியில் உருவாகும் புதிய மிக உயரமான குடியிருப்பு கோபுரங்கள்!
16/07/2026 Duração: 03minசிட்னி நகரின் வானளாவிய தோற்றத்தை மாற்றவுள்ள புதிய ஆடம்பர குடியிருப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 16 ஜூலை 2026 - வியாழக்கிழமை
16/07/2026 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
கரிசல் மண்ணின் கதைசொல்லி பூமணி: ஓர் நினைவு நேர்காணல்
15/07/2026 Duração: 14minதமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர் பூமணி மறைந்தார். கரிசல் மண்ணின் மக்களையும், அவர்களின் வாழ்க்கையையும், சமூக உறவுகளையும் மிகுந்த யதார்த்தத்துடன் தனது படைப்புகளில் பதிவு செய்தவர் பூமணி. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்பட்ட காலப்பகுதியில், 2014ஆம் ஆண்டு, எழுத்தாளர் பூமணியை நாம் நேர்காணல் செய்திருந்தோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அந்த நேர்காணலை, எழுத்தாளர் பூமணியின் நினைவாக மீண்டும் உங்களுக்காக ஒலிபரப்புகிறோம். அவருடன் உரையாடியவர்: றைசெல்.Writer Poomani, one of the most important figures in the Tamil literary world, has passed away. Through his works, Poomani portrayed with great realism the people of the Karisal region, their lives and their social relationships. He was awarded the Sahitya Akademi Award, one of India’s most prestigious literary honours, for his novel Agnaadi. Around the time he received the award in 2014, we interviewed writer Poomani. In memory of Poomani
-
குழந்தைகளின் மனநலம், பதட்டத்தின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் தீர்வுகள்.
15/07/2026 Duração: 20minகுழந்தைகளில் அதிகரித்து வரும் பதட்டம் (Anxiety) – குழந்தைகளின் மனநலம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், குழந்தைகளில் பதட்டம் ஏன் அதிகரிக்கிறது, அதன் அறிகுறிகள் என்ன, பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, பன்முகக் கலாச்சாரப் பின்னணி மற்றும் மனஉளைச்சல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் குழந்தை உளவியலாளர் , தற்போது ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறைத் துறையில் பணியாற்றி வரும் உளவியலாளர் ஸ்மிருதி நாயர் அவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம் அவரோடு உரையாடுகிறார் சரண்யா பாலகிருஷ்ணன்.
-
உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸை 2-0 என்ற கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
15/07/2026 Duração: 05minஅரை இறுதிப் போட்டியில் ஃபிரான்ஸை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, ஸ்பெயின் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளது. இந்தத் தோல்வி, ஃபிரான்ஸின் Les Bleus அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. தற்போது அவர்களின் கவனம் சனிக்கிழமை நடைபெறும் மூன்றாவது இடத்திற்கான போட்டி மீது திரும்பியுள்ளது. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்துநான்காம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இளம் தாய், 'ஜானா' கொலை! இந்தியர் கைது!!
15/07/2026 Duração: 04minகுயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் ஒரு சோகச் செய்தி நான்கு மாதக் குழந்தையின் தாயான, முப்பது வயதுடைய ஜானா ஆம்ஸ்ட்ராங் (Jana Armstrong), டூவூம்பா (Toowoomba) நகரில் காணாமல் போய், நாட்களாகத் தேடப்பட்ட நிலையில், அவரது உடல் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில், அவரது முன்னாள் வாழ்க்கைத் துணையும், அக்குழந்தையின் தந்தையுமான, இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
சிட்னி முருகன் கோவில் கலாச்சார மண்டபம்: கருத்து வேறுபாடுகளைக் கடந்து அடுத்த கட்டம் என்ன?
15/07/2026 Duração: 15minசிட்னி முருகன் கோவில் வளாகத்தில் Sydney Cultural Community Centre ஒன்றை உருவாக்கும் திட்டம் தொடர்பாக சைவ மன்றத்துக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இந்தத் திட்டம் தொடர்பாக நம்முடன் பேசுகிறார் சிட்னி முருகன் கோவிலை நிர்வகிக்கும் சைவ மன்றத்தின் தலைவர் அனந்தநடராஜா பகீரதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
இந்நாட்டில் மூன்றில் இரண்டு ஊழியர்கள் பணியிடத்தில் இனப்பாகுபாட்டை அனுபவிக்கிறார்கள்
15/07/2026 Duração: 09minAIHS, The Australian Institute of Health and Safety என்ற ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய புதிய ஆய்வின்படி, இந்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள், பணியிடத்தில் இனப்பாகுபாட்டை நேரடியாக அனுபவித்திருக்கிறார்கள், அல்லது அது நடப்பதைக் கண்ணால் கண்டிருக்கிறார்கள். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 15 ஜூலை 2026, புதன்கிழமை
15/07/2026 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/07/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கையின் தமிழ், முஸ்லீம் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானம்
14/07/2026 Duração: 08minவரலாற்றில் முதற்தடவையாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையக தமிழ், முஸ்லிம் கட்சிகள் தாம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
ஆஸ்திரேலிய சர்வதேச விமான நிலையங்களில் டிஜிட்டல் பயணிகள் அட்டை அறிமுகம்!
14/07/2026 Duração: 03minஆஸ்திரேலிய சர்வதேச விமான நிலையங்களில் Passenger Arrival Card காகித வருகைப் படிவங்களுக்கு பதிலாக டிஜிட்டல் பயணிகள் அட்டைகள் அறிமுகமாகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
Centrelink பயனாளர்களே உஷார்! புதிய மின்னஞ்சல் மோசடி!
14/07/2026 Duração: 02minCentrelink வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில் புதிய வகை மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 14 ஜூலை 2026 - செவ்வாய்க்கிழமை
14/07/2026 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
சொந்த மொபைல் போனை வேலைக்குப் பயன்படுத்தினால் வரிச்சலுகை கோர முடியுமா?
13/07/2026 Duração: 02minஉங்கள் மொபைலை நீங்கள் வேலைக்கு அதிகம் பயன்படுத்தினால் அதற்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது வரிச்சலுகையாக கோரலாம். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எப்படி எட்டின?
13/07/2026 Duração: 05minதொடக்கத்தில் போட்டியிட்ட சாதனை அளவிலான 48 அணிகளில், தற்போது நான்கு அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கின்றன. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்திரண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
E-OCI அட்டை அறிமுகம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மேலும் எளிய நடைமுறை!
13/07/2026 Duração: 03minவெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள E-OCI (Electronic Overseas Citizen of India) கார்டு, OCI விண்ணப்ப செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவில் எளிதாக்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.