Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 250:56:26
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழர் இனப்பிரச்சனை தொடர்பான கண்காட்சி

    15/05/2026 Duração: 05min

    ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் அகதிகள் பேரவை (Tamil Refugee Council) ஏற்பாடு செய்த ‘Tamil Genocide Truth Telling Exhibition’ எனும் கண்காட்சி கடந்த புதன்கிழமை (13 மே) நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதாக கூறப்படும் வன்முறை, இடப்பெயர்வு, மனித உரிமை மீறல், அது தொடர்பான நீதி கோரிக்கைகள் என்று பல ஆவணங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்வின் நோக்கம், இப்படியான செயற்பாடுகள் குறித்து எழும் விமர்சனம் பற்றி தமிழ் அகதிகள் பேரவையின் NSW மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பகுமார் அவர்கள் கலந்துரையாடுகிறார். அவரோடு உரையாடியவர் – றைசெல்.

  • ‘ஜோசப் விஜய் எனும் நான்’: ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர்?

    14/05/2026 Duração: 12min

    தமிழ்நாட்டில் “ஜோசப் விஜய் எனும் நான்” என்று கூறி முதலமைச்சராக பதவி ஏற்றார் பிரபல நடிகர் விஜய். அவர் குறித்தும், அவர் ஆட்சி குறித்த எதிர்பார்ப்பு குறித்தும் ஆஸ்திரேலிய தமிழ் மக்கள் சிலரின் கருத்துக்களை SBS தமிழ் நிகழ்ச்சிக்காக தொகுத்தளிக்கிறார் சுக்ருதி நாராயணன்.

  • நிதிநிலை அறிக்கை 2026: முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான புதிய சலுகை

    14/05/2026 Duração: 02min

    2026 பெடரல் நிதிநிலை அறிக்கையில், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய மாற்றம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? அதனை எவ்வாறு திட்டமிடுவது?

    14/05/2026 Duração: 12min

    Palliative care விழிப்புணர்வு வாரம் இந்த ஆண்டு மே 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. Palliative care இறுதிக்கால சிகிச்சை என்றால் என்ன? இந்த சேவையை யாரெல்லாம் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்று Palliative care குறித்து பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் முதியோர் நல வைத்தியர் Dr பூரணி முருகானந்தம் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • மர்மங்கள்- ஒரு தொடர்கதை: The Great Train Robbery

    14/05/2026 Duração: 11min

    வாழ்க்கையின் நிகழ்வுகள், குற்றச்செயல்கள்- அது தொடர்பான வழக்குகள், காணாமல் போன நபர்கள் மற்றும் அது தொடர்பான சூழ்நிலைகள், விநோதமான சம்பவங்கள், விளக்கமில்லாத -யார் செய்தார் - எப்படி நிகழ்ந்தது என்று இதுவரை அறியப்படாத மரணங்கள், யூகங்கள், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட புதிர்கள்- என்று, தீர்வு அல்லது விளக்கம் இல்லாமல் உலகில் இன்றும் பல மர்மங்கள் தொடர்கின்றன. அப்படியான unresolved mysteries - விடை காணப்படாத அல்லது தீர்வு காணமுடியாத மர்மங்களை - இந்த தொடரும் கதைகள் சிலவற்றை நேயர்களுக்கு கொண்டுவருவதே ‘மர்மங்கள் ஒரு தொடர்கதை’ என்ற இந்த தொடர். மர்மங்கள்- ஒரு தொடர்கதை - Unresolved mysteries – தொடரில் 1963 ஆம் ஆண்டு London Royal Mail Trainயில் நடந்த கொள்ளை சம்பவத்தை முன்வைக்கிறார் இரா. சத்யநாதன். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • செய்தியின் பின்னணி: 2026 நிதிநிலை அறிக்கை வீட்டுவசதியை முன்னேற்றுமா?

    14/05/2026 Duração: 09min

    கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில், கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers தனது ஐந்தாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார். நாட்டின் வீட்டுவசதி நெருக்கடியை எதிர்கொள்ள இரண்டு பெரிய வரி சீர்திருத்தங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன. "Negative Gearing" எனும் எதிர்மறை வரிச்சலுகை, மற்றும் மூலதன ஆதாய வரி (Capital Gains Tax) இரண்டிலும் கொண்டுவரப்படவிருக்கும் மாற்றங்கள், கடந்த இரண்டு தசாப்தங்களில் ஆஸ்திரேலிய சொத்து சந்தையை வடிவமைத்த தனிச்சலுகைகளில் மிகப் பெரிய மாற்றமாக கருதப்படுகின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • அஸ்பாரகஸை ஏன் சாப்பிட வேண்டும்?

    14/05/2026 Duração: 08min

    அஸ்பாரகஸைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அதை எவ்வாறு உண்ணலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் பிரபல சமையல்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 14 மே 2026 - வியாழக்கிழமை

    14/05/2026 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 14/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • நிதிநிலை அறிக்கை 2026: அகதிகள் தொடர்பில் என்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?

    13/05/2026 Duração: 03min

    2026–27 பெடரல் நிதிநிலை அறிக்கையில் அகதிகள் மற்றும் புகலிடம்கோருவோர் தொடர்பில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்ற செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்

  • State Nomination ஊடாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவது எப்படி?

    13/05/2026 Duração: 12min

    ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வழிமுறைகளில் ஒன்றான State Nomination குறித்து சிட்னியில் குடிவரவு முகவராகக் கடையாற்றும் திருவேங்கடம் ஆறுமுகம் அவர்களுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்

  • இலங்கை: மலையக மக்களுக்கு எதிரான வன்முறைக்கு தீர்வு கோரி போராட்டம்

    13/05/2026 Duração: 08min

    அண்மைக்காலமாக மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவருகிறது. இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இந்த சூழல் தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • தமிழகத்தில் புதிய அரசின் செயல்பாடு & அதிமுகவில் பிளவு

    13/05/2026 Duração: 08min

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலவரம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • இன்றைய செய்திகள்: 13 மே 2026, புதன்கிழமை

    12/05/2026 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/05/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • நாட்டின் நிதி நிலை அறிக்கை “கடினமான சீர்திருத்தங்களின் பாதை” – லேபர் அரசு

    12/05/2026 Duração: 09min

    ஆஸ்திரேலியாவின் 2026-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் - வரவு செலவுத் திட்டத்தை நாட்டின் கருவூலக காப்பாளர் Treasurer Jim Chalmers செவ்வாய்க்கிழமை (12 மே) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். செய்தி விவரணத்தின் ஆங்கில மூலம் SBS இன் Deborah Groarke. தமிழில் றைசெல்.

  • 850 பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக Amazon ஆஸ்திரேலியா அறிவிப்பு!

    12/05/2026 Duração: 02min

    Amazon ஆஸ்திரேலியா நிறுவனம் 850 seasonal workers- குறிப்பிட்ட காலப்பகுதிக்கான பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • போலி பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் தொடர்பில் ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

    12/05/2026 Duração: 02min

    போலியான பாதுகாப்பு (Protection) விசா கோரிக்கைகள் அதிகரித்து வருவது குறித்து ஆஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 12 மே 2026 - செவ்வாய்க்கிழமை

    12/05/2026 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி : உணவு பொருட்களின் விலை மேலும் உயரக்கூடும் - காரணம் என்ன?

    11/05/2026 Duração: 08min

    அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய மத்திய கிழக்கு அரசியல் குழப்பங்கள் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு எரிபொருள் விலைகளில் மட்டுமல்லாமல், உணவு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

  • ஆபத்தான Golden Staph பாக்டீரியாவை கண்டறிய புதிய பரிசோதனை முறை கண்டுபிடிப்பு!

    11/05/2026 Duração: 12min

    RMIT பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், Golden staph என்ற ஆபத்தான பாக்டீரியா கிருமியை கண்டறிய புதிய நிறம் மாறும் சோதனை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பு குறித்து விரிவாக விளக்குகிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ராஜேஷ் ராமநாதன். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • இன்றைய செய்திகள்: 11 மே 2026 - திங்கட்கிழமை

    11/05/2026 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 11/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

página 3 de 99