Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
NAB வங்கியில் 21 மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய முயன்ற மூவருக்கு தண்டனை அறிவிப்பு
21/01/2025 Duração: 02minNAB வங்கியில் 21 மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் Monika Singh, Davendar Deo , Srinivas Naidu Chamakuri ஆகிய மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Mindfulness: a simple explanation and its relevance - உளமார்ந்து வாழ்தல் (Mindfulness): எளிய விளக்கமும், கடைபிடிக்கும் முறைகளும்
21/01/2025 Duração: 17minDr. Ramaswami (Ram) Mahalingam is a renowned cultural psychologist, award-winning researcher, teacher, mentor, artist, and filmmaker. His work (www.mindfuldignity.com) examines caste, gender, race, ethnicity, sexuality, and social class through critical cultural psychology, with a focus on power, marginality, and dignity using an intersectional lens. A Fellow of the American Psychological Association, Dr. Mahalingam has received numerous awards for his teaching, research, and mentorship, including the Tamil American Pioneer Award from FeTNA. He is the creator of the Banyan Tree Mindset, a holistic mindfulness framework emphasizing dignity and the interconnectedness of mental, physical, emotional, and social well-being. He recently visited Sydney and shared his insights with RaySel at the SBS studio. - டாக்டர் ராமசாமி (ராம்) மகாலிங்கம் அவர்கள் புகழ்பெற்ற கலாச்சார உளவியலாளர், விருது பெற்ற ஆராய்ச்சியாளர், பேராசிரியர், வழிகாட்டி, கலைஞர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர். சாதி, பாலினம், இனம், பாலியல் மற்றும் சமூக வர்க
-
அமெரிக்காவின் 47ஆவது அதிபராகப் பதவியேற்றார் டிரம்ப்!
21/01/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 21/01/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலிய டாலரின் வரலாறு காணாத வீழ்ச்சி நமது வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
20/01/2025 Duração: 09minஅமெரிக்க டாலருக்கு எதிராக ஆஸ்திரேலிய டாலர் வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆஸ்திரேலிய டாலர் வீழ்ச்சி, அன்றாட ஆஸ்திரேலிய மக்களை, குறிப்பாக வெளிநாட்டுப் பயணம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை, ஏற்றுமதி பொருட்களின் விலை, பணவீக்கம் போன்ற அம்சங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்குகிறார் NewGen Consulting Australasia நிறைவேற்று அதிகாரியான இமானுவேல் எமில்ராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
சிட்னியின் இரயில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறு செப்டம்பர் வரை தொடருமா?
20/01/2025 Duração: 08minஇரண்டு நாட்கள் இரயில் சேவைகள் தடைப்பட்டதற்குப் பிறகு, இரயில் தொழிற்சங்கங்கள் தங்கள் பாதுகாக்கப்பட்ட தொழில்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டதால், பயணிகள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சிரமமின்றி பயணிக்க முடிந்தது. சிட்னியின் இரயில் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தொழில்துறை நடவடிக்கையை, Fair Work Commission கடந்த வியாழக்கிழமை தற்காலிகமாக நிறுத்தியது.
-
ஹமாஸ் விடுதலை செய்த மூன்று இஸ்ரேலிய பெண்கள் இஸ்ரேல் வந்தடைந்தனர்
20/01/2025 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 20 ஜனவரி 2025 திங்கட்கிழமை.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
19/01/2025 Duração: 09minஇந்தியாவை உலுக்கிய நடிகர் சைஃப் அலிகான் கத்திக்குத்து சம்பவம், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு தொடரும் எதிர்ப்புகள், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் புகார் மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் - திமுக மற்றும் நாம் தமிழர் காட்சிகள் மட்டுமே நேரடி போட்டி போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!
-
What is Zionism, and is it antisemitic to be anti-Israel? - சையோனிசம் (Zionism) என்றால் என்ன, இஸ்ரேலுக்கு எதிராக இருப்பது யூத எதிர்ப்பா?
18/01/2025 Duração: 10minReports of anti-Jewish incidents in Australia are on the rise. But there's disagreement on where to draw the line between antisemitism and anti-Zionism. - ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் யூத எதிர்ப்பிற்கும் சையோனிச எதிர்ப்பிற்கும் இடையில் எங்கு கோடு வரைய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
-
Is antisemitism in Australia changing? - ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு மாறி வருகிறதா?
18/01/2025 Duração: 06minAntisemitism is nothing new. But experts say the kinds of anti-Jewish incidents and attacks we're seeing now have never happened before in Australia. - ஆனால், இப்போது நாம் காணும் யூத எதிர்ப்பு சம்பவங்களும் தாக்குதல்களும் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் நடந்ததில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
17/01/2025 Duração: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (12 – 18 ஜனவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 18 ஜனவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
பிரபலமாகி பணம் சேர்க்க குழந்தைக்கு நஞ்சூட்டியதாக, குயின்ஸ்லாந்து தாய் கைது
17/01/2025 Duração: 02minநன்கொடைகளைப் பெறவும், சமூகவலைத்தளங்களில் தன்னைப் பின்தொடர்பவர்களை அதிகரிக்கும் நோக்கிலும், தனது ஒரு வயது குழந்தைக்கு அங்கீகரிக்கப்படாத மருந்துகள் வழங்கியதன் ஊடாக நஞ்சூட்டியதாக குயின்ஸ்லாந்து பெண் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விரைவில் ஆஸ்திரேலியா வரும் Rap Ceylon இசைக்குழு
17/01/2025 Duração: 19minஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் Rap Ceylon இசைக் குழுவின் துடிப்பான மற்றும் உற்சாகமான நிகழ்ச்சிகளை அனுபவிக்கத் தயாராகுங்கள்! வாகீசன் ரா அருள், அட்விக் உதயகுமார் மற்றும் திஷான் விஜயமோகன் ஆகியோரை உள்ளடக்கிய இந்த துடிப்பான குழு, பாரம்பரியம் மற்றும் புதுமைகளின் ஒரு சிலிர்ப்பூட்டும் கலவையை ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வர இருக்கிறது. தமிழ் பாரம்பரியத்தின் செழுமையை துடிப்பான தாளங்கள் மற்றும் நவீன இசையுடன் கலந்து எடுத்து வருகிறார்கள் Rap Ceylon இசைக் குழுவினர்.
-
சிட்னியில் மலரத் தயாராகும் "பிணநாற்றம் வீசும் பூ" ! எங்கே எப்படி பார்வையிடலாம்?
17/01/2025 Duração: 02minசிட்னி தாவரவியல் பூங்காவில் உள்ள "Corpse Flower"- "பிணநாற்றம் வீசும் பூ" 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பூக்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“நுண்ணறிவு குறித்து தொல்காப்பியத்திலேயே விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது"
17/01/2025 Duração: 14minமுனைவர் இரா. சிவகுமார் அவர்கள், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொருள் கனிம வள பொறியியல் துறை கணித மூத்த விரிவுரையாளர்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
17/01/2025 Duração: 08minஇலங்கை அதிபரின் சீனப் பயணம், நாடாளுமன்றத்தில் எதிரொலித்த மலையக மக்களின் பிரச்சினைகள், மற்றும் 13வது அரசியலமைப்புக்கு அமைய மாகாண சபை தேர்தலை நடாத்துவோம் என உறுதி வழங்கியுள்ள அரசு- இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
சிறுவர்களை சிறையில் அடைப்பதால் நாட்டின் நற்பெயருக்குக் கறை
17/01/2025 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 17 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை.
-
NBN இணைய சேவை நவீன மயமாகிறது. நமக்கு கிடைக்கும் பலன் என்ன?
16/01/2025 Duração: 06minNational Broadband Network – சுருக்கமாக NBN என்று அழைக்கப்படும் இன்டர்நெட் – இணைய இணைப்பு சேவைக்கு அரசு இன்னும் அதிகமாக 3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்குவதாக பிரதமர் antony Albanese அறிவித்தார். National Broadband Networkஐ நவீன மயமாகுவதன் மூலம் சாதாரண மனிதர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்ற கேள்வியுடன்தா தயாரிக்கப்பட்ட “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி. தயாரித்து முன்வைப்பவர்: றைசெல்.
-
பனாமா கால்வாயை ராணுவத்தை பயன்படுத்தி கையகப்படுத்துவோம் என்று Trump ஏன் கூறுகிறார்?
16/01/2025 Duração: 11minபனாமா கால்வாயை அமெரிக்காவிடம் தரவேண்டும் அல்லது ராணுவத்தை பயன்படுத்தி அதை அமெரிக்கா கைப்பற்றும் என்று எதிர்வரும் திங்கள் (20 January) அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் Donald Trump அதிரடியான கருத்துக்களை அண்மையில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் பனாமா கால்வாய் குறித்த வரலாறு மற்றும் இன்றைய பின்னணியை விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
நாடு முழுவதும் கத்திகளின் விற்பனையை நிறுத்துவதாக Coles அறிவிப்பு!
16/01/2025 Duração: 02minகுயின்ஸ்லாந்தில் 13 வயது சிறுவனால் Coles ஊழியர் ஒருவர் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, நாடு முழுவதும் சமையலறை கத்திகளை விற்பனை செய்வதை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
போகிப் பொங்கல்: இன்றைய சூழலில் தேவையான விழாவா?
16/01/2025 Duração: 09minபோகிப் பொங்கல் நீண்ட பாரம்பரிய வரலாறு கொண்டது. ஆனால் இன்றைய சுற்றுப்புறச் சூழல் பின்னணியில் போகிப் பொங்கல் அர்த்தம் தரும் விழாவா? நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றவர்கள்: சிட்னியில் வாழும் சுசி விஜயகுமார் மற்றும் தமிழகத்திலிருந்து Environmentalist Foundation of India அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். முதலில் ஒலித்த நாள்: 12 January 2022