Sbs Tamil - Sbs
Stem cell (குருத்தணு) பெறுவதில் ஆஸ்திரேலிய தமிழர் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்ன?
- Autor: Vários
- Narrador: Vários
- Editora: Podcast
- Duração: 0:12:40
- Mais informações
Informações:
Sinopse
கடந்த வருட இறுதியில், இலங்கைத் தமிழ் பின்னணி கொண்ட 28 வயதான நிமலன் சுந்தரம் என்பவருக்கு T-cell Acute Lymphoblastic Leukemia எனும் அரிய வகை இரத்தப் புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. திடகாத்திரத்துடன் வாழ்ந்து வந்த அவருக்கு இந்தப் புற்று நோய் வந்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது அவரையும் அவரது குடும்பத்தவரையும் உலுக்கியிருந்தது. இருந்தாலும், அவரது நோயைக் குணப்படுத்த குருத்தணு என்று அறியப்படும் stem cell சிகிச்சை தேவைப்படலாம் என்றும், அதற்கு ஒத்த மரபணு உள்ள ஒருவர் அதனைத் தானம் செய்ய வேண்டும் என்றும் கேள்விப்பட்டதும் அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்திருக்கிறது. ஆனால், இலங்கை, இந்திய பின்னணி கொண்டவர்கள், அதிலும் குறிப்பாக தமிழ் பின்னணி கொண்டவர்கள் குருத்தணு தானம் செய்யும் பதிவேட்டில் அதிகளவில் இல்லை என்று கேள்விப்பட்டதும் நிமலனுக்கு மட்டுமல்ல, இனிமேல் அது தேவைப்படும் தமிழ் பின்னணி கொண்டவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற சிந்தனையில் அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்கள் நிமலன் சுந்தரம் அவர்களின் குடும்பத்தினர். இது குறித்து, நிமலன் சுந்தரம் அவர்களின் பெற்றோர் விதுரன் சுந்தரம் மற்றும் செந்த