Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
அகதிகள் தங்குமிடம் தொடர்பில் புதிய வழக்கை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா
16/04/2026 Duração: 02minஅகதிகள் தங்குமிட செலவுகள் தொடர்பாக, பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள ஒரு விடுதி ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடர முயற்சி செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
விழி இழந்த பிறவிக்கலைஞன்
16/04/2026 Duração: 11minபிறவியிலேயே கண்பார்வை இழந்திருந்தாலும் தன்னம்பிக்கையோடு இயங்கும் ஒரு புல்லாங்குழல் இசைக் கலைஞர் வரதராஜன் பெருமாள். Covid-19 பெருந்தொற்று எல்லோரையும் பாதித்திருந்த வேளையில், பெருமாள் எப்படித் தாக்குப் பிடித்தார் என்று எமக்கு 2020ஆம் ஆண்டு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது. அவரை நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன்.
-
செய்தியின் பின்னணி: Coalition கூட்டணியின் குடிவரவுக் கொள்கை – மாறப்போவது என்ன?
16/04/2026 Duração: 11minஆஸ்திரேலிய அரசியலில் இந்த வாரம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ஒரு முக்கியமான தலைப்பு, Coalition கூட்டணிக் கட்சியின் புதிய குடிவரவுக் கொள்கை. சிட்னியில் உள்ள மென்சீஸ் ஆய்வு மையத்தில் (Menzies Research Centre), நேற்று முன்தினம், செவ்வாய்க்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் ஆங்கஸ் டெய்லர் (Angus Taylor) தனது முதல் கொள்கை உரையை நிகழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் குடிவரவு முறையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று அவர் இந்த உரையில் வலியுறுத்தினார். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
சுவை மிகுந்த Chicken Rendang செய்வது எப்படி?
16/04/2026 Duração: 05minChicken Rendang செய்முறை தொடர்பில் விளக்குகிறார் பிரபல சமையல்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 16 ஏப்ரல் 2026 - வியாழக்கிழமை
16/04/2026 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 16/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
NSW மாநிலத்தில் இனி மருந்தாளர்களே கருத்தடை மாத்திரைகளை வழங்க முடியும்
15/04/2026 Duração: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பெண்கள் இனி நேரடியாக மருந்தகங்களிலிருந்து கருத்தடை மாத்திரைகளை பெறுவதற்கான வசதி வழங்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Australia’s unique wildlife: what makes it special and what’s at risk - ஆஸ்திரேலியாவின் தனித்துவமான விலங்குகளைக் காக்க என்ன செய்யலாம்?
15/04/2026 Duração: 10minAustralia is one of the most biodiverse places on Earth, home to wildlife and plant species found nowhere else on the planet. In this episode of Australia Explained you’ll learn about what makes Australia’s biodiversity so special, the threats it faces and how we can all help protect it. - ஆஸ்திரேலியாவின் biodiversity-உயிரியல் பல்வகைமை ஏன் இவ்வளவு தனித்துவமானது, அது எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்ன, மேலும் அதை பாதுகாக்க நாம் செய்யக்கூடியவை என்ன என்பது தொடர்பில் Phil Tucak தயாரித்த ஆங்கில விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 15 ஏப்ரல் 2026, புதன்கிழமை
15/04/2026 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 15/04/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இலங்கை: சித்திரை புத்தாண்டு கொண்டாட்டங்கள்
15/04/2026 Duração: 08minஇலங்கையில் சித்திரை புது வருடத்தின் கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
தமிழக தேர்தல் களம் – 15 ஏப்ரல் 2026
14/04/2026 Duração: 08minதமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பின்னணியில் தமிழக தேர்தல் கள நிலவரத்தை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
போலி நோட்டுகள் குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை-புதிய சோதனை நடவடிக்கையும் ஆரம்பம்
14/04/2026 Duração: 02minஆஸ்திரேலியாவில் போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வருவதால், அதிகாரிகளும் வணிக நிறுவனங்களும் அதிக எச்சரிக்கையுடன் உள்ளனர்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
செய்தியின் பின்னணி: ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை ஆரம்பம்- அடுத்தது என்ன?
14/04/2026 Duração: 07minஉலகின் முக்கியமான கடல் வர்த்தக பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து SBS News-க்காக ஆங்கிலத்தில் Camille Bianchi எழுதிய விவரணத்தை அடிப்படையாக கொண்டு செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் றேனுகா துரைசிங்கம்
-
ஆஸ்திரேலியாவில் வீட்டு விலை எங்கே குறைகிறது? எங்கே அதிகரிக்கிறது?
14/04/2026 Duração: 02minஆஸ்திரேலியாவின் வீட்டு விலை தொடர்பில் தற்போது கலவையான நிலை உருவாகியுள்ளதுடன், வளர்ச்சி வேகம் மந்தமடையும் அறிகுறிகள் தென்படுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இன்றைய செய்திகள்: 14 ஏப்ரல் 2026 - செவ்வாய்க்கிழமை
13/04/2026 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/04/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
மெல்பன் தமிழ் சந்தை: வணிகமும் கலாச்சாரமும் இணையும் பெருவிழா!
13/04/2026 Duração: 10minAustralian Tamil Chamber of Commerce - Victorian Chapter ஏற்பாட்டில் 'மெல்பன் தமிழ் சந்தை' விரைவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் வேல்-Executive Vice President மற்றும் திருமலை செல்வி சண்முகம்-Vice President of Membership ஆகியோரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மின்சார மிதிவண்டிகள் (e-Bikes) வரமா சாபமா?
13/04/2026 Duração: 10minநம் நாட்டின் சாலைகளில் மின்சார மிதிவண்டிகள் – e-Bikeகளின் பாவனை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்டிருக்கும் போர், எரிபொருள் விலை மீது நேரடித்தாக்கம் செலுத்துகிறது. அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு ஒரு வழியாக, மக்கள் வாகனங்களை ஓட்டுவதை விடுத்து மின்மிதிவண்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். அதிகரிக்கும் e-Bikeகள் சாலைப் பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, இந்த மின்மிதிவண்டி ஓட்டுனர்கள் மட்டுமல்ல, வாகன ஓட்டுனர்களும் எவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று Supreme Car Learners என்ற அமைப்பை நிறுவி, பல வருடங்களாக வாகனங்களை சரியான முறையில் ஓட்டுவதற்குக் கற்றுக் கொடுத்துவரும் சிவகுருநாதன் சிறீக்குமார் அவர்களுடன் கேட்டறிந்து கொள்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
செய்தியின் பின்னணி: அமெரிக்கா – ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தைகள் - உடன்பாடு ?
13/04/2026 Duração: 09minபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான, இருபத்தொரு மணி நேரம் நீடித்த, பேச்சுவார்த்தைகள் எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளன. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் உயரும் வட்டி விகிதங்களை ஏற்கனவே எதிர்கொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு இது மிகவும் விரும்பத்தகாத செய்தி. இந்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
இன்றைய செய்திகள்: 13 ஏப்ரல் 2026 - திங்கட்கிழமை
13/04/2026 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/04/2026) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
‘திராவிட முன்னேற்றக் கழகம் சவாலை சமாளிக்கும், களத்தில் வெல்லும்’ - பேராசிரியர் ரவீந்திரன்
12/04/2026 Duração: 11minதமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பின்னணியில் திமுகவின் வெற்றிவாய்ப்பு குறித்து கலந்துரையாடுகிறார் அண்மையில், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 – 11 ஏப்ரல் 2026)
11/04/2026 Duração: 05minஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (5 – 11 ஏப்ரல் 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.