Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
ஆஸ்திரேலிய சர்வதேச விமான நிலையங்களில் டிஜிட்டல் பயணிகள் அட்டை அறிமுகம்!
14/07/2026 Duração: 03minஆஸ்திரேலிய சர்வதேச விமான நிலையங்களில் Passenger Arrival Card காகித வருகைப் படிவங்களுக்கு பதிலாக டிஜிட்டல் பயணிகள் அட்டைகள் அறிமுகமாகிறது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
Centrelink பயனாளர்களே உஷார்! புதிய மின்னஞ்சல் மோசடி!
14/07/2026 Duração: 02minCentrelink வாடிக்கையாளர்களை ஏமாற்றும் நோக்கில் புதிய வகை மோசடி மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இன்றைய செய்திகள்: 14 ஜூலை 2026 - செவ்வாய்க்கிழமை
14/07/2026 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/07/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.
-
சொந்த மொபைல் போனை வேலைக்குப் பயன்படுத்தினால் வரிச்சலுகை கோர முடியுமா?
13/07/2026 Duração: 02minஉங்கள் மொபைலை நீங்கள் வேலைக்கு அதிகம் பயன்படுத்தினால் அதற்கு ஆகும் செலவின் ஒரு பகுதியை வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது வரிச்சலுகையாக கோரலாம். இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
உலகக் கோப்பை தினசரி: ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எப்படி எட்டின?
13/07/2026 Duração: 05minதொடக்கத்தில் போட்டியிட்ட சாதனை அளவிலான 48 அணிகளில், தற்போது நான்கு அணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. ஃபிரான்ஸ், ஸ்பெயின், ஆர்ஜென்டீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளும் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கின்றன. உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் முப்பத்திரண்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
E-OCI அட்டை அறிமுகம்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு மேலும் எளிய நடைமுறை!
13/07/2026 Duração: 03minவெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள E-OCI (Electronic Overseas Citizen of India) கார்டு, OCI விண்ணப்ப செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் வடிவில் எளிதாக்கியுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
இசைக்குயில் ஓய்ந்தது - எஸ். ஜானகிக்கு ஓர் இசை அஞ்சலி
13/07/2026 Duração: 13minஇரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்திருக்கும் பாடகி, S. ஜானகி அவர்கள் நேற்று முந்தினம், ஜூலை பதினோராம் தேதி, மைசூரில், தனது எண்பத்தெட்டாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் குறித்த ஒரு நினைவுப்பகிர்வை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
குழந்தைகளின் online உலகம்: பெற்றோரின் கவலைக்கு அரசின் பதில்
13/07/2026 Duração: 12minஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் கடுமையான நடவடிக்கைகளோடு மேலும் பல மாற்றங்களையும் தற்போது அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும், அவை ஏற்படுத்தும் புதிய சவால்கள் குறித்தும் எளிதாக விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
இன்றைய செய்திகள்: 13 ஜூலை 2026 - திங்கட்கிழமை
13/07/2026 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/07/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
12/07/2026 Duração: 09minவியட்நாம் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 10 தமிழர்கள் பலி; பழம்பெரும் பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவு; தமிழகத்தில் நடைபெற இருந்த ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்க உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (5 – 11 ஜூலை 2026)
11/07/2026 Duração: 05minஆஸ்திரேலியாவின் இந்த வார (5 – 11 ஜூலை 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.
-
இந்தியப் பிரதமரின் ஆஸ்திரேலியப் பயணம்: இருதரப்பு உறவை புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லுமா?
10/07/2026 Duração: 12minஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் ஆஸ்திரேலியா பயணம் ஆஸ்திரேலியா இந்திய உறவு எந்த திசையில் நகர்கிறது என்பதை அளவிடும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. யுரேனியம் ஏற்றுமதி உட்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்திய பிரதமர் மோடியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
உலகக் கோப்பை தினசரி: அரையிறுதிக்கு சுற்றுக்கு பிரான்ஸ் முன்னேறியது
10/07/2026 Duração: 04minஃபிஃபா உலகக் கோப்பையின் 29-வது நாளில், மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் பிரான்ஸ் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. Kylian Mbappé எட்டு கோல்களுடன் Lionel Messi [[lee-oh-NEL MESS-ee]] அடித்த கோல்களுடன் சமநிலையை எட்டிய அதே வேளை, Ousmane Dembélé பிரான்ஸின் வெற்றியை உறுதி செய்தார். உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தொன்பதாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Qantas இழப்பீடு தொடர்பான SMS: மோசடி என்று நினைத்து தவறவிடாதீர்கள்!
10/07/2026 Duração: 02minQantas கோவிட் Flight Credit வழக்கில் இழப்பீடு பெறத் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு Qantas நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.
-
தமிழுக்கு தனி அடையாளம் தந்த தனித்தமிழின் தந்தை
10/07/2026 Duração: 04minதமிழ்மொழி அதன் சொந்தச் செழுமையோடும் தனித்தன்மையோடும் வளர வேண்டும் என்று வலியுறுத்திய முக்கிய அறிஞர்களில் ஒருவர் மறைமலை அடிகள். எழுத்தாளர், சைவ சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி, தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடி என பல தளங்களில் அவர் நினைவுகூரப்படுகிறார். மறைமலை அடிகள் குறித்த காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.
-
தமிழர்களும் ஏன் NAIDOC வாரத்தைக் கொண்டாட வேண்டும்?
10/07/2026 Duração: 11minNAIDOC வாரம், இந்த வருடம் ஜூலை 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. NAIDOC வாரத்தின் முக்கியத்துவம் குறித்து ஒரு நேர்காணல். Dr ராமா ஜெயராஜ் அவர்கள், சார்ல்ஸ் டார்வின் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர். உயர்கல்வியில் விரிவான அனுபவம் கொண்ட இவர், தமிழ், மற்றும் பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆராயும் ஒரு சுயாதீன ஆராய்ச்சியாளரும் ஆவார். பூர்வீகக் குடிமக்கள் குறித்து அவரது ஆராய்ச்சி, கடந்த ஐம்பது வருடங்களில் அவர்களது வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தமிழ்க் கலாச்சாரத்துடன் அவர் கண்ட ஒற்றுமைகள் குறித்து Dr ராமா ஜெயராஜ் அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமாகவா?
10/07/2026 Duração: 08minஆஸ்திரேலியர்கள் முன்பைவிடத் தற்போது நீண்ட காலம் உயிர் வாழ்கிறார்கள். ஆனால், அந்த நீண்ட ஆயுள் ஆரோக்கியமான வாழ்க்கையாக இருக்கிறதா? Australian Institute of Health and Welfare (AIHW) வெளியிட்டுள்ள "Australia's Health 2026" அறிக்கை, நாட்டின் தற்போதைய சுகாதார நிலை குறித்த முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இன்றைய செய்திகள்: 10 ஜூலை 2026 -வெள்ளிக்கிழமை
10/07/2026 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/07/2026) செய்திகள். வாசித்தவர் : சரண்யா பாலகிருஷ்ணன்
-
இலங்கை: இந்த வார முக்கிய செய்திகள்
09/07/2026 Duração: 08minவடக்கு . கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்; சமூக ஊடக செயற்பாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க இலங்கை அரசு நடவடிக்கை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
உலகக் கோப்பை தினசரி: அரையிறுதி இடத்திற்காக ஃபிரான்சும் மொராக்கோவும் மறுபடியும் மோதுகின்றன
09/07/2026 Duração: 04minஃபிஃபா உலகக் கோப்பை போட்டிகள், வெள்ளிக்கிழமை அன்று, பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையேயான விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியுடன் மீண்டும் தொடங்குகிறது. கத்தார் நகரில் 2022 ஆம் ஆண்டு அரையிறுதிப் போட்டியில் இந்த இரு அணிகளும் கடைசியாக மோதியிருந்தன. மொராக்கோ தனது பழிவாங்கலைத் தீர்க்குமா, அல்லது பிரான்ஸ் மீண்டும் வெற்றி பெறுமா? உலகக் கோப்பை தினசரித் தொகுப்பின் இருபத்தெட்டாம் நாள் நிகழ்வுகளின் தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.