Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழர் இனப்பிரச்சனை தொடர்பான கண்காட்சி

Informações:

Sinopse

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழ் அகதிகள் பேரவை (Tamil Refugee Council) ஏற்பாடு செய்த ‘Tamil Genocide Truth Telling Exhibition’ எனும் கண்காட்சி கடந்த புதன்கிழமை (13 மே) நடைபெற்றது. இலங்கையில் தமிழர்கள் எதிர்கொண்டதாக கூறப்படும் வன்முறை, இடப்பெயர்வு, மனித உரிமை மீறல், அது தொடர்பான நீதி கோரிக்கைகள் என்று பல ஆவணங்கள் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த நிகழ்வின் நோக்கம், இப்படியான செயற்பாடுகள் குறித்து எழும் விமர்சனம் பற்றி தமிழ் அகதிகள் பேரவையின் NSW மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி இன்பகுமார் அவர்கள் கலந்துரையாடுகிறார். அவரோடு உரையாடியவர் – றைசெல்.