Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 250:56:26
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • ஆஸ்திரேலிய பள்ளிக் குழந்தைகள் & பல்கலை மாணவர்களின் தகவல் திருட்டு: நாம் அறிய வேண்டியது என்ன?

    10/05/2026 Duração: 11min

    ஆஸ்திரேலியாவின் பல கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தும் Canvas நிறுவனத்தின் தகவல் களவாடப்பட்டுள்ளது (data breach). இது பள்ளிகள், TAFE மற்றும் பல்கலைக்கழகங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் உண்மையான ஆபத்து என்ன? உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று விளக்குகிறார் பிரிஸ்பேனில் வாழும் தொழில்நுட்பத் துறை Test Manager நதியா சந்திரசேகரன் அவர்கள். தொழில்நுட்ப துறையில் Test Manager ஆக பணியாற்றும் நதியா, “Kaapiyam with Nadhiya” என்ற தனது சமூக ஊடக தளத்தின் மூலம் புத்தகங்கள், ஊக்கம் மற்றும் டிஜிட்டல் விழிப்புணர்வு தொடர்பான உள்ளடக்கங்களை பகிர்ந்து வருகிறார். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  • தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்றார் தவெக தலைவர் விஜய்!

    10/05/2026 Duração: 08min

    தமிழகத்தின் 13-ஆவது முதல்வராக தவெக தலைவர் சி ஜோசப் விஜய் ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 10.15 மணியளவில் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் விஜயை தொடர்ந்து 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • குடியேற்றத்தை வெகுவாகக் குறைக்கக் கோரும் One Nation கட்சி தேர்தலில் அமோக வெற்றி!

    10/05/2026 Duração: 03min

    New South Wales மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதியான Farrer தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் One Nation கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சி பெற்றிருக்கும் வெற்றி ஆஸ்திரேலிய அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.

  • இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் நடிகர் விஜய்

    09/05/2026 Duração: 08min

    தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் நேற்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை அடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு (இந்திய நேரப்படி) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது. கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (3 மே – 9 மே 2026)

    09/05/2026 Duração: 05min

    ஆஸ்திரேலியாவில் இந்த வாரம் (3 மே – 9 மே 2026) நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல்.

  • சரிவை நோக்கி நகரும் ஆஸ்திரேலிய வீட்டு விலைகள்

    08/05/2026 Duração: 02min

    ஆஸ்திரேலியாவின் வீட்டுச் சந்தை சரிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக புதிய தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கை: ஆஸ்திரேலியா உட்பட 40 நாட்டவர்களுக்கு இலவச விசா

    08/05/2026 Duração: 02min

    ஆஸ்திரலியா உட்பட 40 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இலவச விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ‘ஊரில் நடக்கும் திருவிழா சிட்னிக்கு வந்தது போன்ற உணர்வு வந்தது’

    08/05/2026 Duração: 11min

    TACA - தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் கடந்த ஞாயிறு (3 May) சிட்னி பெருநகரின் Stanhope Gardens எனுமிடத்திலுள்ள Blacktown Leisure Centreயில் வைத்து நடத்திய ‘சிட்னியில் சித்திரை திருவிழா’ நிகழ்வின்போது நம்மிடம் கலந்துரைடியவர்களின் ஒலித் தொகுப்பு. தொகுத்தவர்: றைசெல்.

  • குயின்ஸ்லாந்து தமிழ் சமூகத்திற்கான பணியில் 40 ஆண்டுகள்!

    08/05/2026 Duração: 05min

    குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கம் (Queensland Tamil Association) தனது 40 ஆண்டுகால சமூக சேவையை, கலைப் பணியை இந்த வாரம் பெருமையுடன் கொண்டாடுகிறது. இந்த மைல்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழர் பாரம்பரியத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பறை இசை மற்றும் கரகாட்டம் போன்ற வண்ணமயமான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. இது குறித்து நம்முடன் உரையாடுகிறார் குயின்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கார்த்திக் இளங்கோவன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.

  • Women’s legal services in Australia: Understanding your options - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான என்னென்ன சட்ட உதவி சேவைகள் உள்ளன?

    08/05/2026 Duração: 10min

    Workplace discrimination, gender-based violence and financial inequality—these are just some of the reasons why women need dedicated legal services. You don’t have to navigate the legal system alone. In Australia, free legal services exist to advocate for vulnerable women in ways that are safe, confidential and culturally appropriate. - ஆஸ்திரேலியாவில் பெண்களுக்காகப் பாதுகாப்பான, ரகசியமான மற்றும் கலாச்சார ரீதியாகப் பொருத்தமான வழிகளில் உதவுவதற்கு இலவச சட்ட சேவைகள் உள்ளன. இதுதொடர்பில் Melissa Compagnoni ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 08 மே 2026 - வெள்ளிக்கிழமை

    08/05/2026 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/05/2026) செய்திகள். வாசித்தவர் : செல்வி இன்பசேகரன்.

  • தமிழகத்தில் புதிய அரசு அமைக்க கூட்டணி உருவாகிறதா?

    08/05/2026 Duração: 09min

    தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிக மிக பரப்பரப்பான சூழலுக்கிடையில் நடந்து முடிந்த நிலையில், தவெக ஆட்சி அமைவதற்கான சாத்தியம் பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலியா வந்திறங்கிய ISIS தொடர்பு குடும்பங்கள் கைது

    07/05/2026 Duração: 07min

    சிரியாவில் பல ஆண்டுகளாக அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த, ஐ.எஸ். தொடர்புடையதாகக் கருதப்படும் சில ஆஸ்திரேலிய பெண்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவிற்கு நாடுதிரும்பியுள்ளனர். அதில் சிலர் கைதாகியுள்ளனர். இந்த வருகை தேசிய பாதுகாப்பு, மனிதாபிமானம் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு குறித்து ஆஸ்திரேலியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • நமக்கு தெரியாமலே நாம் பிளாஸ்டிக் துகள்களை சாப்பிடுகிறோமா?

    07/05/2026 Duração: 12min

    பிளாஸ்டிக் என்பது, பெட்ரோலிய கச்சா எண்ணையில் இருந்து பெறப்படும் ஒரு செயற்கை பொருள். மேலும், எளிதில் மக்கும் தன்மை கொண்டது அல்ல. Newcastle பல்கலைக்கழகத்தில் பிளாஸ்டிக் துகள்கள் (Microplastics) குறித்து ஆராய்ச்சி செய்து வரும் டாக்டர் தவமணி பழனிசாமி, பிளாஸ்டிக் மாசு மற்றும் பிளாஸ்டிக் துகள்கள் பற்றியும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் மற்றும் பிளாஸ்டிக் மாசை எவ்வாறு குறைக்கலாம் போன்ற விடயங்களை விளக்குகிறார். அவரோடு உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

  • செய்தியின் பின்னணி: ஆஸ்திரேலிய டாலர் 4 ஆண்டுகளில் இப்போது உச்சம் தொட்டது!

    07/05/2026 Duração: 10min

    கடந்த சில வாரங்களாக, ஆஸ்திரேலிய டொலரின் மதிப்பு நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது. காரணம் – ஆஸ்திரேலிய டொலர் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டி விட்டது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • மூட்டுகளில் ஏற்படும் சத்தம் Arthritis-மூட்டழற்சி வருவதற்கான அறிகுறியா?

    07/05/2026 Duração: 12min

    Arthritis என்பது வயதானவர்களைப் பாதிக்கும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியில் Arthritis பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்கமளிக்கிறார் எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் கனகரட்ணம் காண்டீபன் அவர்கள். அவருடன் உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய செய்திகள்: 07 மே 2026 - வியாழக்கிழமை

    07/05/2026 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 07/05/2026) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • ‘சித்திரைதான் தமிழரின் புத்தாண்டு’ – மன்னர் மன்னன்

    06/05/2026 Duração: 18min

    தமிழர் வரலாறு, அடையாளம், தமிழ்த் தேசிய சிந்தனை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றவர் மன்னர் மன்னன் அவர்கள். ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பேச்சாளர் என்று பன்முகம் கொண்ட மன்னர் மன்னன் அவர்கள், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பல கலாசார மற்றும் வரலாற்று விவாதங்களில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 2 (அவரோடு உரையாடலில் கலந்துகொண்டவர் பல்கலைக்கழக மாணவர் அபிராம் அவர்கள்).

  • ‘தமிழருக்கு தமிழன் என்ற பெருமிதம் தேவை‘ – மன்னர் மன்னன்

    06/05/2026 Duração: 13min

    தமிழர் வரலாறு, அடையாளம், தமிழ்த் தேசிய சிந்தனை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றவர் மன்னர் மன்னன் அவர்கள். ஊடகவியலாளர், எழுத்தாளர், ஆய்வாளர், பேச்சாளர் என்று பன்முகம் கொண்ட மன்னர் மன்னன் அவர்கள், தமிழ்ப் புத்தாண்டு உள்ளிட்ட பல கலாசார மற்றும் வரலாற்று விவாதங்களில் தனித்துவமான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். அவரை SBS ஒலிப்பதிவு கூடத்தில் வைத்து சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 1

  • Vivid சிட்னி ஒளித்திருவிழா விரைவில் தொடங்குகிறது!

    06/05/2026 Duração: 02min

    சிட்னிவாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்வூட்டவென பலவண்ண ஒளியூட்டல்கள், இசை நிகழ்ச்சிகள், உணவுத் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் Vivid Sydney விரைவில் தொடங்கவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 4 de 99