Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 62:59:58
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    08/11/2024 Duração: 08min

    நாடாளுமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கு இன்னும் ஒரு வார காலம் இருக்கையில் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது; எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் மீனவர்கள் போராட்டம். இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • US Presidential election: It’s the economy not women’s right that decided - அமெரிக்க அதிபர் தெரிவு: பெண்ணியம் அல்ல, பொருளாதாரம்

    08/11/2024 Duração: 17min

    Political observer and long-term resident of California Mithiran Karunananthan analyses the US elections with Kulasegaram Sanchayan. - அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தல் குறித்து அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தில் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருபவரும், அமெரிக்க அரசியலைக் கூர்ந்து அவதானித்து வருபவருமான மித்திரன் கருணாநந்தன் அவர்களோடு அலசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • நாஸி பாணியில் வணக்கம் செலுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதித்த விக்டோரிய நீதிமன்றம்

    08/11/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • “மனைவி, இரு குழந்தைகளை விட்டுவிட்டு புத்த பிக்குவானேன்”

    07/11/2024 Duração: 14min

    தமிழ் சமூகத்தில் புத்த சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் எண்ணிக்கை குறைவு என்ற பின்னணியில், தமிழ் சமூகத்தை சார்ந்த புத்த மதகுரு ஒருவரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் சந்தித்தது ஆச்சரியமாக இருந்தது. அவரோடு உரையாடியது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. பிரசாந்த் என்று முதலில் அழைக்கப்பட்ட அவர் இப்போது பந்தே சத்தவிகாரி என்று புத்த துறவியாக அறியப்படுகிறார். அவரை அவரது புத்த மடத்தில் அண்ணாமலை மகிழ்நன் அவர்களுடன் சந்தித்து றைசெல் நீண்ட நேரம் உரையாடினார். அவர் வழங்கிய நேர்முகத்தின் முதற்பாகம்.

  • தமிழின் மாபெரும் ஆளுமை: தமிழண்ணல்

    07/11/2024 Duração: 08min

    இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர். மத்திய அரசின் செம்மொழி விருது, தமிழக அரசின் கலைமாமணி மற்றும் திரு.வி.க. விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். அவர் நம்மைவிட்டு மறைந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்தாலும், அவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட வேளையில் நம்முடன் அவர் உரையாடியது காலத்தால் அழிக்க இயலாத பதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • ஒன்பது லட்சம் பேரின் பணம் அரசிடம் உள்ளது; எப்படி உரிமை கோருவது?

    07/11/2024 Duração: 08min

    ஆஸ்திரேலியாவில் Medicare கார்டு வைத்திருக்கும் பல லட்சம் மக்களில் சுமார் 930,000 பேருக்கு சொந்தமான ஆனால் அவர்கள் உரிமை கோராத 241 மில்லியன் டாலர் பணம் தம்மிடம் இருப்பதாக பெடரல் அரசு அறிவித்துள்ளது. இதை எப்படி பெறுவது என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Claire Hain. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.

  • அகதிகள் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்பின் விவரம்

    07/11/2024 Duração: 06min

    காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் அல்லது புகலிட கோரிக்கையாளர்களை கடந்த ஆண்டு சமூகத்தில் வாழ அனுமதித்த அரசு அவர்களுக்கு வழங்கிய நிபந்தனைகள் தொடர்பாக முக்கிய தீர்ப்பை High Court – தலைமை நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியது. அது குறித்த விளக்கத்தை முன்வைக்கிறார் றைசெல்.

  • Can you leave your kids alone at home? - குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்லலாமா?

    07/11/2024 Duração: 11min

    Many families have to leave their children unsupervised for a period of time either after school hours or during school holidays. When it comes to child supervision parents have a legal obligation under Australian law but the laws are not very clear on age limits or amount of time a child can be left unattended. Lawyer Henry Pill from Slater and Gordon helps us through the maze of laws that vary from state to state. - குழந்தைகளையோ, சிறுவர்களையோ வீட்டில் தனியாக விட்டுச் செல்லலாமா? இது குறித்து தமிழர்கள் சிலர் என்ன நினைக்கிறார்கள் என்ற அவர்களது கருத்துகளுடன், ஆஸ்திரேலிய சட்டம் என்ன சொல்கிறது என்று சட்ட வல்லுநர் ஒருவருடைய கருத்துகளுடனும் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • அமெரிக்க தேர்தலில் Donald Trump அமோக வெற்றிபெற்றார்

    07/11/2024 Duração: 04min

    செய்திகள்: 7 நவம்பர் 2024 வியாழக்கிழமை வாசித்தவர்: றைசெல்

  • மாணவர் கடன்களை 20% தள்ளுபடி செய்வதாக அரசு அறிவிப்பு

    06/11/2024 Duração: 06min

    ஆஸ்திரேலிய அரசானது HELP எனப்படும் Higher Education Loan Program அல்லது மாணவர் கடனை 20% குறைப்பதாக அறிவித்துள்ளது. இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். On 3 November 2024 the Australian Government announced it will reduce every Australian’s HELP or student loan debt by 20%. This builds on the changes to make HELP and student loan repayments fairer that the Government announced on 2 November 2024.

  • NSW கடலில் அடித்துச்செல்லப்பட்ட 11 வயதுச் சிறுவனின் உடல் மீட்பு!

    06/11/2024 Duração: 02min

    கடந்த ஞாயிற்றுக்கிழமை நியூ சவுத் வேல்ஸ் The Entrance-இல் 11 வயதுச்சிறுவன் ஒருவன் கடலில் காணாமல் போயிருந்தநிலையில் அச்சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

    06/11/2024 Duração: 17min

    நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது பாகம் இது. இந்நிகழ்ச்சியில் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தியுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வரதட்சணை கொடுமை குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக அங்கீகரிக்கப்படுகிறது

    06/11/2024 Duração: 08min

    குடும்பச் சட்டத் திருத்த முன்வடிவு இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது, வரதட்சணை கொடுமை குடும்ப வன்முறையின் ஒரு வடிவமாக அங்கீகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Superannuation ஓய்வூதிய நிதியை ஒருவர் முன்கூட்டி எடுக்க முடியுமா?

    06/11/2024 Duração: 10min

    Superannuation ஓய்வூதிய நிதியை ஒருவர் ஒய்வு பெறும் வயதை எட்டுவதற்கு முன்னர் எடுக்க முடியுமா? எதற்கான அத்தியாவசிய தேவைகளுக்கு ஓய்வூதிய நிதியை முன்கூட்டி எடுக்கலாம்? அதற்கான நடைமுறை என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட எமில் எம்மானுவேல் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.

  • தமிழக பேசுபொருள்: பிராமணர்களுக்கு பாதுகாப்பு & வர்ணாசிரம எதிர்ப்பு

    05/11/2024 Duração: 09min

    இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தொடர்பான சர்ச்சை, தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் அதன் தொடர்ச்சியாக உருவான சர்ச்சை அடங்கிய தொகுப்பினை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • கனடா சீக்கியத் தலைவர் கொலை: இந்தியா தொடர்பு? ஆஸ்திரேலியா கவலை

    05/11/2024 Duração: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 06/11/2024) செய்திகள். வாசித்தவர்:மகேஸ்வரன் பிரபாகரன்.

  • 2025இல் அதிகளவான ஆஸ்திரேலியர்கள் சுற்றுலா செல்லப்போகும் இடங்கள் எவை தெரியுமா?

    05/11/2024 Duração: 02min

    2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் பயணத்திற்காக அதிக பணம் செலவழிக்கவுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியப் பயணிகளைப் பொறுத்தவரை, சுற்றுலா செல்வதற்கான பலரது விருப்பத்தெரிவாக ஜப்பான் முதலிடத்தில் உள்ளபோதிலும் அடுத்த ஆண்டு வேறு ஒரு இலக்கை நோக்கிச் அவர்கள் செல்வது போல் தெரிகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • வெல்லப்போவது எந்தக் குதிரை? மெல்பன் கப் குதிரைப்பந்தயப் போட்டி இன்று!

    05/11/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 05/11/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • He wanted to give back to the community...so Naren collects garbage - மக்களுக்குத் திரும்பக் கொடுக்க நினைத்தார்...அதனால் குப்பைகளை சேகரிக்கிறார் நரேன்

    04/11/2024 Duração: 11min

    Naren Subramaniam, who immigrated to Australia from Tamil Nadu, has started a company using his knowledge to protect the environment.. - தமிழ் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குக் குடிவந்துள்ள நரேன் சுப்ரமணியம் அவர்கள் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க, தனது அறிவைப் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.

  • இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் பின்னணி

    04/11/2024 Duração: 08min

    இந்தியா கனடா இடையே மிக மோசமான உறவு நிலவி வரும் நிலையில், கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பதாக இந்திய அரசின் குற்றச்சாட்டு மற்றும் திமுக கூட்டணியில் சிக்கலை உருவாக்கும் தமிழக வெற்றிக் கழகம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

página 5 de 25