Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை!
27/03/2025 Duração: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
எதிர்கட்சியின் பதில் நிதிநிலை அறிக்கையில் என்ன அம்சங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன?
27/03/2025 Duração: 08minநேற்றிரவு பெடரல் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் Peter Dutton 2025-26 நிதியாண்டிற்கான பதில் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். வாழ்க்கைச் செலவை சமாளிக்கும் திட்டங்கள், குடிவரவு எண்ணிக்கை குறித்த திட்டம் மற்றும் நலத்துறை மேம்பாடு என பல அம்சங்களை அறிவித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் மே 3 - அரசு வட்டாரம்!
27/03/2025 Duração: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் 485 TR விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடம்!
27/03/2025 Duração: 02minஆஸ்திரேலியாவில் 485 Temporary Graduate விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
'ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்' - சிறுகதை
27/03/2025 Duração: 16minதமிழக எழுத்தாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் அவர்கள் மார்ச் 16ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 64. நாறும்பூநாதன் அவர்கள் 2017ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த போது, அவரை குலசேகரம் சஞ்சயன் நேர்கண்டு உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் போது, தனது சிறுகதை ஒன்றை அவரது குரலிலேயே அவர் வாசித்திருந்தார். அதனை ஒரு நிகழ்ச்சியாகத் தயாரித்து வழங்குகிறோம்.
-
2032 பிரிஸ்பன் புதிய ஒலிம்பிக் அரங்கம் - சர்ச்சையும், தீர்வும்!
27/03/2025 Duração: 07min2032 பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான மைதானங்கள், உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவை குறித்த 100 நாள் சுயாதீன மதிப்பாய்வைத் தொடர்ந்து 2032 ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவதற்கான திட்டங்களை கடந்த செவ்வாய்க்கிழமை குயின்ஸ்லாந்து மாநில பிரீமியர் David Crisafulli வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
வெற்றி பெற்றால் பெட்ரோல் விலையை குறைப்போம் - Peter Dutton
27/03/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 27/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
இந்த வார தமிழ்நாடு/இந்தியா: முக்கிய செய்திகளின் பின்னணி
26/03/2025 Duração: 09minஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்; சென்னையில் தொடர் நகை கொள்ளை- என்கவுன்டர் பின்னணி; தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்வு; ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா நகைச்சுவை பேச்சும் சிவசேனா, பாஜக கட்சிகளின் விமர்சனமும், ஜம்மு & காஷ்மீரில் பிரிவினைவாத செயல்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை உள்ளிட்ட பல செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
ரமலான் மாதத்தில் வேலை, வீடு மற்றும் நோன்பு எல்லாவற்றையும் இவர்கள் எவ்வாறு சமாளிக்கிறார்கள்!
26/03/2025 Duração: 14minரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பது இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று. சூரிய உதயம் முதல் மறையும் வரை உணவு உண்ணாமல் தண்ணீர் அருந்தாமல் வேலை, வீடு, சமையல் மற்றும் வழிபாடு ஆகியவற்றை ரமலான் மாதத்தில் எவ்வாறு கையாள்கிறார்கள் என சிட்னி, பிரிஸ்பன் மற்றும் பெர்த் நகரங்களில் வசிக்கும் சிலரின் அனுபவ கருத்துகளுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
நிதிநிலை அறிக்கையில் ஒருவருக்கான புதிய வரிச்சலுகை அறிவிப்பு!
26/03/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 26/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
நாட்டில் என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன?
26/03/2025 Duração: 18minநாட்டில் பல்வேறுவிதமான மோசடிகளில் சிக்கி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. என்னென்ன விதமான மோசடிகள் நடக்கின்றன என்பது தொடர்பில் விளக்குகிறார் விக்டோரிய காவல்துறையைச் சேர்ந்த Acting Sergeant ராஜேஷ் சாம்பமூர்த்தி. அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நிதிநிலை அறிக்கை 2025: என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன?
26/03/2025 Duração: 09min2025-26 நிதியாண்டிற்கான பெடரல் அரசின் நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Treasurer Jim Chalmers நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டார். இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
"சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவோம்" - One Nation கட்சி
25/03/2025 Duração: 09minPauline Hanson-இன் One Nation கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுமார் 75,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடியேற்றம் நாட்டில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து SBS Examines -இற்காக Rachael Knowles, Jarrod Landells மற்றும் Cristina Freitas இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து தருகிறார் செல்வி.
-
இன்றிரவு நிதிநிலை அறிக்கை; முன்னோட்டமாக சில தகவல்கள் வெளிவந்தன!
24/03/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
பெர்த் விமான நிலைய ஊழியரைத் தாக்கிய இந்திய நபருக்கான தண்டனை அறிவிப்பு!
24/03/2025 Duração: 02minபெர்த் விமான நிலைய ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில், இந்தியர் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட விமானநிலைய ஊழியருக்கு 7500 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
எங்கும் எதிலும் செயற்கை நுண்ணறிவு: AIஐ புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி?
24/03/2025 Duração: 16minநாம் பயன்படுத்தும் பொருட்களில் நமக்கு தெரியாமலேயே ஒளிந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு என்கிறார் AI நிபுணர் சுகன்யா அவர்கள். உலகில் நீக்கமற நிறைந்திருக்கும் AIஐ எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது, அதில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
மருந்து விலையை ஆஸ்திரேலிய அரசு குறைப்பதை அமெரிக்கா ஏன் எதிர்க்கிறது?
24/03/2025 Duração: 09minஆஸ்திரேலிய மருந்துகளுக்கு வரி விதிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. Pharmaceutical Benefits Scheme (PBS) என்ற எமது நாட்டின் மருந்துகளை மலிவாக விற்க மானியங்கள் வழங்கும் திட்டம், அமெரிக்க நிறுவனங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று அவை வாதிடுகின்றனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக PBS திட்டத்தின் கீழ் மருந்து விலைகளைக் குறைப்பதாக இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் உறுதியளித்துள்ள நிலையில் இந்த முறையீடு வந்துள்ளது. வரி அதிகரிப்புகளை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் பதட்டங்களுக்கு மத்தியில் Labor கட்சியும் Coalition எதிர்க் கட்சிகளும் PBS திட்டத்தைப் பாதுகாக்கப் போவதாக உறுதியளித்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியது: காசா சுகாதார அமைச்சு
24/03/2025 Duração: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 24 மார்ச் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
-
விண்வெளியில் ஒன்பது மாதங்களாக சிக்கியவர்கள் மீண்டு வந்தது எப்படி?
23/03/2025 Duração: 09minவிண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பமுடியாத நிலையில் கடந்த ஒன்பது மாதகாலமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (International Space Station) தங்கியிருந்த அமெரிக்காவின் இரு விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வாரம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியிருப்பது குறித்த பின்னணி நிகழ்ச்சி. விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சிவீதம் வீழ்ச்சி- காரணம் என்ன?
22/03/2025 Duração: 02minஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சி இரண்டாண்டுகளில் மிகவும் குறைந்த நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.