Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editora: Podcast
  • Duração: 33:13:34
  • Mais informações

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • "பாரதி உயிரோடு இருந்தால், தமிழ்நாட்டில் அனைத்தும் தமிழ்மயமாகியிருக்கும்."

    06/02/2025 Duração: 22min

    மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி எட்டயபுரத்தில் 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அதே எட்டயபுரத்தில் பிறந்த எழுத்தாளர் இளசை மணியன் அவர்கள் மகாகவி பாரதி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

  • Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க MasterCard-இன் புதிய திட்டம்!

    06/02/2025 Duração: 06min

    Credit மற்றும் Debit கார்டுகளின் மோசடிகளை தடுக்க 2030-ஆம் ஆண்டிற்குள் கார்டுகளில் இருந்து 16 இலக்க எண்ணை அகற்றும் திட்டத்தை MasterCard அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • உணவு பழக்கங்களினால் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியுமா?

    06/02/2025 Duração: 10min

    தலைவலி காய்ச்சல் போன்று புற்றுநோய் பெருகியதற்கு நமது வாழ்க்கை முறை மாற்றம் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது குறிப்பாக நமது உணவு பழக்க வழக்கம். சரியான உணவுகளை உண்ணுவதன் மூலமும் சில உணவுகளை தவிர்ப்பதன் மூலமும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்கிறார் சிட்னியில் உள்ள உணவியல் நிபுணர் பிரியா ஐயர். அவரோடு உரையாடுபவர் செல்வி.

  • “தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவர்

    06/02/2025 Duração: 06min

    தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் வீரமாமுனிவர் அவர்கள். கிறிஸ்தவ சமயத்தை போதிக்க தமிழகம் வந்த அவர் தமிழ் இலக்கியத்தில் ஈடுபட்டு நிகழ்த்திய சாதனைகளும், பங்களிப்பும் அளப்பெரிது. ‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் பற்றிய காலத்துளி நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • சிட்னி பல்கலைக்கழகத்திற்கு 100 மில்லியன் நன்கொடை வழங்கி சாதனை படைத்த பில்லியனர்

    06/02/2025 Duração: 02min

    அறிவியல் மற்றும் கணிதத்தில் பட்டம்பெறும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த ஏதுவாக, சிட்னி பல்கலைக்கழகத்திற்கு வரலாற்றுச் சாதனைத் தொகையான 100 மில்லியன் டொலர்கள் நன்கொடையை Robin Khuda என்ற பில்லியனர் வழங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • யூத எதிர்ப்பு நடவடிக்கைக் குற்றங்களுக்கு சிறைத்தண்டனை - பெடரல் அரசு ஒப்புதல்!

    06/02/2025 Duração: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வியாழக்கிழமை 06/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • Seatbelt அபராதங்கள் மூலம் ஆறு மாதங்களில் 34 மில்லியன் டொலர்கள் வருமானமீட்டிய NSW அரசு

    05/02/2025 Duração: 02min

    நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு கடந்த ஆறு மாதங்களில் ஆசனப்பட்டி -சீட் பெல்ட் தொடர்பான அபராதங்கள் மூலம் சுமார் 34 மில்லியன் டொலர்கள் வருமானமீட்டியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Medicare திட்டம் காலாவதியான ஒன்றா?

    05/02/2025 Duração: 07min

    ஆஸ்திரேலியாவின் Medicare கட்டமைப்பு காலாவதியானது என்றும், இன்றைய நோயாளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நாட்டின் உச்ச மருத்துவ அமைப்பு Australian Medical Association தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • சிட்னியில் இனிய இலக்கிய சந்திப்பு!

    05/02/2025 Duração: 08min

    சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 9 - ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்து விரிவாக உரையாடுகிறார்கள் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு கர்ணன் சிதம்பரபாரதி மற்றும் செயலாளர் திரு அனகன் பாபு. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்திய நிதிநிலை அறிக்கை, மீனவர்கள் கைது & இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்

    05/02/2025 Duração: 08min

    இந்திய நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்ட தென்னிந்திய மாநிலங்கள், தொடரும் தமிழக மீனவர்கள் கைது மற்றும் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா பற்றிய செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • தமிழர் ஒடுக்குமுறை தினம் - கன்பராவில் பேரணி நடத்திய தமிழ் ஏதிலிகள் கழகம்

    04/02/2025 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( புதன்கிழமை 05/02/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • குடும்ப வன்முறையற்ற சமூகத்தை உருவாக்குவதே இந்நூலின் நோக்கம் -டெபோரா சுகிர்தகுமார்

    04/02/2025 Duração: 11min

    ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பன்முகம்கொண்ட டெபோரா சுகிர்தகுமார், Raising Resilient Families என்ற நூலை அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்த நூல் 2025 ஆம் ஆண்டு Able Golden Book விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் தொடர்பில் அவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டப்படும் பெயர்கள் எவை தெரியுமா?

    04/02/2025 Duração: 02min

    ஆஸ்திரேலிய மக்கள் தமது குழந்தைகளுக்கு சூட்டும் பெயர்களில் மிகவும் பிரபலமானவை எவை என்ற புதிய தரவுகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இலங்கையில் உள்ளவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் புலமைப்பரிசில்!

    04/02/2025 Duração: 02min

    ஆஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின்கீழ் இலங்கையிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் Australia Awards புலமைப்பரிசிலின் 2026ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • குயின்ஸ்லாந்தின் பிரபல சுற்றுலாத் தீவில் சுறா தாக்கி 17 வயதுப் பெண் பலி

    04/02/2025 Duração: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 04/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • Pink Sari நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயணம்!

    03/02/2025 Duração: 10min

    பிப்ரவரி 4-ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணர்வு தினம். இதனை முன்னிட்டு Pink Sari அமைப்பு பிப்ரவரி 9-ஆம் தேதி ஒரு விழிப்புணர்வு நடைபயணம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்த நடைபயணம் குறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் ருக்மணி வெங்கட்ராமனுடன் உரையாடுகிறார் செல்வி.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    03/02/2025 Duração: 08min

    மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்ட இந்திய பட்ஜெட் 2025 ஆதரவும் எதிர்ப்பும், ஈரோடு இடைத்தேர்தல் - திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் இறுதி கட்ட பிரச்சாரம் மற்றும் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 'பெரியார் சர்ச்சை' போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

  • Donald Trump எடுத்துள்ள முடிவு ஆஸ்திரேலிய குடியுரிமைக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

    03/02/2025 Duração: 08min

    அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு, அமெரிக்க மண்ணில் பிறந்தால் போதும் என்று அமெரிக்க அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தாலும், தான் தேர்தலில் வெற்றி பெற்றால், அதனை மாற்றுவேன் என்று Donald Trump கூறியிருந்தார். அதிபர் பொறுப்பேற்ற முதல் நாளே, Executive order என்று அறியப்படும் அதிபரால் விடுக்கப்படும் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்து விட்டார்.

  • இணையவழி நியோ- நாஸி வலையமைப்பு மீது நிதித் தடைகளை விதித்த ஆஸ்திரேலியா

    03/02/2025 Duração: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/02/2025) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • சீனாவின் புதிய DeepSeek AI Chatbot ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் எவை?

    02/02/2025 Duração: 11min

    சீனாவின் புதிய DeepSeek AI Chatbot கடந்த வாரம் வெளிவந்து உலகளாவிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய AI Chatbot இந்தளவு பிரபலமாக என்ன காரணம்? இது ஆஸ்திரேலியாவில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார் நியூஜென் கன்சல்டிங் ஆஸ்திரேலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி, பொருளாதாரம், நிதி மற்றும் விற்பனை ஆகிய துறைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட இமானுவேல் எமில்ராஜா அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு செல்வி.

página 12 de 14