Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது 17/08/1980
14/08/2025 Duração: 03min1980ம் ஆண்டு ஆகஸ்து மாதம் 17ம் நாள் Azaria Chamberlain, Uluru மலையடிவாரத்தில் காணாமல் போனது குறித்த காலத்துளி நிகழ்ச்சி படைத்தவர், குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தலுக்காக வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு!
14/08/2025 Duração: 09minபணியிட பாலியல் துன்புறுத்தல் விவகாரங்களில், ஃபெடரல் நீதிமன்றம் இந்த மாத தொடக்கத்தில், பாலியல் துன்புறுத்தல், பாதிக்கப்பட்டவர்களைப் பழிவாங்குதல் மற்றும் மோசமான சேதங்களுக்காக நேபாள பின்னணி கொண்ட Biplavi Jarga Magar என்பவருக்கு பாலியல் துன்புறுத்தலுக்காக ஆஸ்திரேலியாவில் வழங்கப்பட்ட அதி கூடிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
‘போரை நிறுத்த Putin ஒப்புக் கொள்ளாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும்’ – அமெரிக்க அதிபர்
14/08/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 14/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்துமா: எப்படி கட்டுப்படுத்துவது? எப்படி குணமாக்குவது?
13/08/2025 Duração: 08minஆஸ்துமா நோயை எப்படிக் கட்டுப்படுத்தலாம், குணமாக்கலாமென்று விளக்குகிறார் இந்தியாவில் சித்தா வைத்திய முறையில் பிரபலமான மருத்துவர் கு.சிவராமன் B.S.M.S., Ph.D அவர்கள் (Managing Director & Chief Siddha Physician of the Arogya Healthcare www.arogyahealthcare.com). நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். முதலில் பதிவு செய்யப்பட்ட நாள்: 28 மே 2018.
-
புதிய இந்திய சமூக மையங்களை அமைக்க நிதியுதவி – விக்டோரியா அரசு அறிவிப்பு
13/08/2025 Duração: 02minமெல்பனில் புதிய இந்திய சமூக மையங்களை அமைப்பதற்கு விக்டோரியா அரசு நிதியுதவி வழங்குகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
கீழடியின் பண்டைய வசீகரம்: மறுபிறவி எடுத்த களிமண் காதணிகள்
13/08/2025 Duração: 13minகளி மண்ணிலிருந்து கனவுகளை வடிவமைக்கிறார் நிதுஷா கிருஷன். எளிமையான மண்ணை அற்புதமான ஆபரண நகைகளாக மாற்றும் அவரது படைப்புகள் ஒவ்வொன்றும் பாரம்பரியம், படைப்பாற்றல் மற்றும் மீள் தன்மை ஆகியவற்றின் கலவையாகும். அவரது கைகள் ஆர்வம், பொறுமை மற்றும் அடிப்படையிலிருந்து அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்கும் அழகின் கதைகளைச் சொல்கின்றன. Kiki Collection என்ற நிறுவனத்தை உருவாக்கி, நிதுஷா கிருஷன் தனது படைப்புகளை உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறார். போர்ச் சூழலில் இருந்து மீண்டெழுந்த ஒரு சமுதாயத்தின் அடையாளமாக இருக்கும் நிதுஷா கிருஷன் அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய பாலஸ்தீன அங்கீகாரத்தால் பயன் உண்டா? ஐ.நா அங்கீகாரம் கிடைக்குமா?
13/08/2025 Duração: 12minபாலஸ்தீனத்தை பல மேற்கத்திய நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்கவிருக்கும் பின்னணியில், தாமும் அங்கீகரிப்போம் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால் என்ன பலன், பாலஸ்தீனத்திற்கு ஐ.நா அங்கீகாரம் கிடைக்குமா எனும் கேள்விகளுடன் அலசுகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வெங்கடேசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் – றைசெல்.
-
செய்யாத தவறுக்காக 20 ஆண்டுகள் சிறை அனுபவித்த சிட்னிப் பெண்ணும், இழப்பீடும்!
13/08/2025 Duração: 07minதவறான தீர்ப்பினால் இருபது ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய்க்கு NSW அரசு வழங்கும் நட்ட ஈடு போதாது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்த செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இலங்கையில் இராணுவ முகாம் சென்ற தமிழ் இளைஞன் சடலமாக மீட்பு
12/08/2025 Duração: 06minஇலங்கையின் முல்லைத்தீவு, முத்தையன்கட்டு ஊரைச் சார்ந்த இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ அத்துமீறல்களைக் கண்டித்து வடக்கு, கிழக்கில் பணி புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
VIC: போதைப்பொருள் பாவனையால் உயிரிழப்போர் கடந்த 10 ஆண்டுகளில் உச்சம்
12/08/2025 Duração: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 13/08/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: 30,000 பேருக்கு வேலை; மணிக்கு $61.50 சம்பளம்
12/08/2025 Duração: 02min2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கென ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
நாட்டின் வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டது!
12/08/2025 Duração: 02minஆஸ்திரேலியாவின் அதிகாரபூர்வ வட்டி வீதம் குறித்த தனது முடிவினை ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது வெறும் அடையாளம் மட்டுமே என்று சில ஆஸ்திரேலியர்கள் கவலை
12/08/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 12/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
Most Australians see migration as a benefit. Is economic stress changing the story? - பெரும்பாலும் ஆஸ்திரேலியர்கள் குடிவரவை வரவேற்கிறார்கள். பொருளாதார அழுத்தம் அதை மாற்றுமா?
11/08/2025 Duração: 07minMigrants and refugees are often blamed for rising cost of living pressures. Is there a way to break the cycle? - வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கு புலம்பெயர்ந்தோரும் அகதிகளும் பெரும்பாலும் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. அந்த வதந்தியை முறியடிக்க ஏதாவது வழி இருக்கிறதா?
-
Is Australian tap water safe to drink? - நாம் குடிக்கும் குழாய் நீர் பாதுகாப்பானதா?
11/08/2025 Duração: 10minAccess to safe drinking water is essential, and Australia’s often harsh environment means that our drinking water supplies are especially precious. With differences in the availability and quality of drinking water across the country, how do we know if it’s safe to drink? In this episode we get water experts to answer this question and more. - நமது குடிநீர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரங்களை பூர்த்தி செய்யும் வகையில் சுத்திகரிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இருப்பினும், ஆஸ்திரேலியா முழுவதும் குடிநீரின் கிடைக்கும் தன்மை மற்றும் தரத்தில் வேறுபாடுகள் உள்ளன, அவை தண்ணீர் எங்கிருந்து பெறப்படுகிறது, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் நீர் குழாய்களின் நிலை மற்றும் சுத்திகரிப்பு வசதிகளைப் பொறுத்து உள்ளன. இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கிறது ஆஸ்திரேலியா!
11/08/2025 Duração: 03minஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவில் விவாகரத்து குறைகிறது. ஏன்?
11/08/2025 Duração: 09minநம் நாட்டில் திருமணம் செய்து கொண்ட இருவரில் யார் மீதும் தவறு இல்லை என்றாலும், இருவரும் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, தற்போது விவாகரத்துகள் மிகக் குறைந்த விகிதத்திற்குக் குறைந்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ரிசர்வ் வங்கி நாட்டின் வட்டி வீதத்தை நாளை குறைக்குமா?
11/08/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 11/08/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு சொத்து தருவதை ஏன் நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்?
11/08/2025 Duração: 13minஆஸ்திரேலியாவில் மூத்த தலைமுறையிடம் செல்வம் குவிந்துகொண்டே செல்கிறது; இளைய தலைமுறை வீடு வாங்கவே தள்ளாடுகிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து கலந்துரையாடுகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
10/08/2025 Duração: 10minஇந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி எதிரொலி - எதிர்கொள்ள தயாராகிறதா இந்தியா?; தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்திய "சொசைட்டி பரிதாபங்கள்" என்னும் காணொளி - 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது புகார்; பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் மகளிர் மாநாடு; தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - ஆதரவும் எதிர்ப்பும்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!