Informações:
Sinopse
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episódios
-
போப் பிரான்சிஸின் மறைவிற்காக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் - பிரதமர்
22/04/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 22/04/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt
22/04/2025 Duração: 06min'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் கிரீன்ஸ் கட்சித் தலைவர் Bandt பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
நாடாளுமன்றத் தேர்தல் 2025: புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
22/04/2025 Duração: 02minஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் The Australian நடத்தியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவு குறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மாற்றத்தின் முகம்: போப் பிரான்சிஸ் 1936-2025
21/04/2025 Duração: 07minரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் காலமானார். இதுகுறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் மக்களை மகிழ்விக்க வருகிறார் ராஜிவ் காந்தி
21/04/2025 Duração: 11minதமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் எதிர்வரும் மே 4 சிட்னியில் சித்திரைத் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாட்டுபுற இசைக்கலைஞர் ராஜீவ் காந்தி சிட்னி வருகை தரவுள்ளார். அவருடன் தொலைபேசி வழி உரையாடுகிறார் செல்வி.
-
ஆஸ்திரேலிய தேர்தல் முறை அறிவோம்: Preferential Voting
21/04/2025 Duração: 11minஆஸ்திரேலியாவில் மே மாதம் 3 ஆம் தேதி சனிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் Preferential Voting என்ற விருப்ப வரிசை வாக்களிப்பு முறை எப்படி பின்பற்றப்படுகிறது என்று விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஈஸ்டர் காலத்தில் மந்தநிலைக்குத் தள்ளப்பட்டாலும் தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்ந்தன
21/04/2025 Duração: 08minஈஸ்டர் காலத்தில் பிரச்சார வேலைகள் சற்று மந்தநிலைக்குத் தள்ளப்பட்ட போதிலும், தேர்தல் எப்போது நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, நான்காவது வாரம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரங்கள் குறித்த செய்திகளின் பின்னணியைத் தொகுத்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தல்: முன்கூட்டிய வாக்களிப்பு நாளை ஆரம்பம்!
21/04/2025 Duração: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 21/04/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.
-
இயேசு உயிர்ப்பு நாள் சிறப்புரை!
19/04/2025 Duração: 04minஈஸ்டர் - இயேசு உயிர்ப்பு நாள் சிறப்புரை. வழங்குகிறார் - அருட்சகோதரி லீமா அவர்கள்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
18/04/2025 Duração: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (13 ஏப்ரல் – 19 ஏப்ரல் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 19 ஏப்ரல் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்: நேஷனல் கட்சித் தலைவர் Littleproud
18/04/2025 Duração: 07min'ஆஸ்திரேலிய தலைவர்கள் அறிவோம்' தொடரில் நேஷனல் கட்சித் தலைவர் David Littleproud பற்றி அறிந்துகொள்வோம். முன்வைப்பவர் றேனுகா துரைசிங்கம். நிகழ்ச்சித் தயாரிப்பு றைசல்.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
18/04/2025 Duração: 08minபிள்ளையான் கைது தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகள்; சூடு பிடிக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களம்; சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த வீதி விபத்துகள், கொலைகள், நீரில் மூழ்கி மரணம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
குடிவரவு தொடர்பில் கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் எவை?
18/04/2025 Duração: 13minநாட்டின் குடிவரவுக்கொள்கை என்பது அனைத்து கட்சிகளாலும், தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விடயமாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பல கொள்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்த பின்னணியில் குடிவரவு குறித்து முக்கிய கட்சிகள் முன்வைக்கும் கொள்கைகள் குறித்த ஒரு பார்வை. ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் வேலு அவர்களின் கருத்துக்களோடு நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஈஸ்டர் பண்டிகை தொடக்கத்தில் சிறைக் கைதிகளை சந்தித்தார் Pope Francis
18/04/2025 Duração: 05minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 18 ஏப்ரல் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
நீண்ட தூர கார் பயணமா? இவற்றை தெரிந்துவைத்திருப்பது அவசியம்
17/04/2025 Duração: 14minவிடுமுறை காலங்களில், நீண்ட தூரம் வாகனத்தில் பயணிக்கும் போது நாம் திட்டமிட வேண்டிய விடயங்கள் பல அம்சங்கள் உள்ளன. இவை குறித்து சிட்னியில் உள்ள Sydney Auto Repairs இன் உரிமையாளரும் ஆட்டோ மொபைல் துறையில் 30 வருட அனுபவம் உள்ளவருமான திரு.போல்ராஜ் மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் திரு.கந்தையா குமாரதாசன் ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். நிகழ்ச்சி தயாரிப்பு: செல்வி.
-
ஈஸ்டர் சாக்லேட் விலை ஏற்றம்! காரணங்கள் என்ன?
17/04/2025 Duração: 07minஇது ஈஸ்டர் பண்டிகைக் காலமாகும். ஈஸ்டரின்போது, Easter Eggs போன்ற பலவிதமான சாக்லேட் தயாரிப்புகள் மிகவும் பிரபலமானதாகும். ஆனால் இம்முறை இவற்றின் விலைகள் பெரிதும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இவ்விலையேற்றம் ஏன் நிகழ்ந்தது? இது பற்றிய செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
பெர்த் ஓட்டுநர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் தரவுகள்!
17/04/2025 Duração: 02minபெர்த்தின் முக்கிய சாலைகள் சிலவற்றில் நிறுவப்பட்ட பாதுகாப்பு கேமராக்கள், வாகன ஓட்டுநர்களின் ஆபத்தான நடவடிக்கைகளை பதிவு செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
இஸ்லாமிய, இந்து, பஹாய் பார்வையில் ஈஸ்டர்
17/04/2025 Duração: 09minEaster அல்லது உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழா கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. கிறிஸ்தவ மத நம்பிக்கை தவிர, உலகில் பல்வேறு மத நம்பிக்கைகள் உள்ளன. உயிர்ப்பு ஞாயிறு என்ற உயிர்ப்புப் பெருவிழாவை இஸ்லாமிய, இந்து, பஹாய் நம்பிக்கை உள்ளவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்ற ஒரு பார்வையை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
சர்வதேச விமானத்திற்கு சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த சிட்னி நபருக்கு அபராதம்!
17/04/2025 Duração: 02minசர்வதேச விமானமொன்றுக்கு சமூக வலைத்தளத்தில் மிரட்டல் விடுத்த சிட்னி நபருக்கு 10 ஆயிரம் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
காப்பீட்டுக் கட்டணம் Insurance ஏன் உயர்ந்துகொண்டே இருக்கிறது?
17/04/2025 Duração: 07min2024 ஆம் ஆண்டில் Insurance காப்பீட்டு நுகர்வோரின் பிரீமியம் கூர்மையான உயர்வைக் கண்டதால் காப்பீட்டு நிறுவங்களின் லாபம் உயர்ந்துள்ளதாக காப்பீட்டுத் துறையின் KPMG வருடாந்திர மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது. SBS News-இற்காக Sydney Lang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி